அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனானது: மாகாணப் போட்டிக்கும் தெரிவு

🕔 June 26, 2024

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட மாணவர் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று – அக்கரைப்பற்று வலயத்தில் சாம்பியனாகத் தெரிவாகியுள்ளது.

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்துடன் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மோதியது.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று அஷ் சிராஜ் மத்திய மகா வித்தியாலயத்தை, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் வெற்றிகொண்டது.

கோட்ட மட்டங்களில் வெற்றிபெற்ற பாடசாலைகள் – இன்றைய தினம் வயல மட்டப் போட்டிகளில் மோதின.

அந்த வகையில், அக்கரைப்பற்று வலய மட்டத்தில் சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அறபா வித்தியாலயத்தின் மேற்படி கரப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக உழைத்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ. ஹுசையிர், விளையாட்டு ஆசிரியர் ஜே. பஸ்மிர் ஆகியோருக்கும், மாணவர்களுக்கான பயிற்சி இடத்தினை வழங்கி அவர்களுக்கு உத்வேகத்தை வழங்கிய கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் சரப் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அன்சார் தனது நன்றிகளையும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்