பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

🕔 June 16, 2024

பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் கண்டி – அம்பிட்டியவில் நடந்துள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கான மாணவர் பலத்த காயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பிட்டிய – உடுவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் இருவரும் முன்னணி பாடசாலையொன்றில் தரம் பதினொன்றில் கல்வி பயில்கின்றனர்.

சம்பவத்தை அடுத்து சந்தேக நபரை – கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தப்பட்டமை தெரியவந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்