மணிவாணனின் ‘தொட்டி மீன்கள்’, தெற்காசிய குறுந்திரைப்பட விழாவுக்குத் தெரிவு

🕔 June 13, 2024

லங்கை சினிமா படைப்பாளி நடராஜா மணிவாணன் இயக்கத்தில் உருவான ‘தொட்டி மீன்கள்’ குறும்படம், 07ஆவது தெற்காசிய குறுந்திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவாகியுள்ளது.

ஜூலை 07ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தத் திரைப்பட விழா – இந்தியா , கொல்கத்தாவில் நடபெறவுள்ளது.

ஏற்கனவே மதுரை சர்வதேச குறும்பட விழாவிலும் ‘தொட்டி மீன்கள்’ திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் காலத்தில் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஒரு குழந்தை, பரபரப்பான வாழ்க்கைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தனது பெற்றோரிடம் அரவணைப்புக்காக ஏங்குவதைக் கதையாகக் கொண்டது – ‘தொட்டி மீன்கள்’ திரைப்படம்.

சுமார் 10 நிமிடங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் – தான் சொல்ல வந்த செய்தியை மிகவும் சிறப்பாக காண்பித்திருக்கின்றார் இயக்குநர் மணிவாணன்.

இலங்கையில் சிறந்த குறும்படங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்டவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் ‘அஜன்டா 14’ விருது வழங்கும் விழாவில், ‘சிறந்த குறுந்திரைப்படம்’ எனும் விருது உட்பட – இரண்டு விருதுகளை ‘தொட்டி மீன்கள்’ பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானொலி ஊடகத்துறைக்குள் நுழைந்து, சினிமா படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள மணிவாணன், தொட்டி மீன்களுக்கு முன்னரும் பல குறுந்திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்