ஆசிரியையை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, ரஞ்சன் ராமநாயக்க விடுவிப்பு

🕔 June 13, 2024

பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி, ஒரு மில்லியன் ரூபாயை அவரிடமிருந்து பெற்றதாக – குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, நேற்று (12) கண்டி பிரதம நீதவான் விடுவித்துள்ளார்.

பாடசாலை ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில், கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரஞ்சன் ராமநாயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த ஆசிரியையை திருமணம் செய்வதாக ஏமாற்றி 10 லட்சம் ரூபாயை ரஞ்சன் ராமநாயக்க பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க – தான் உண்மைக்காக நின்றதாகவும், தான் குற்றமற்றவர் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“நான் எப்போதும் உண்மையைப் பேசுவேன், தொடர்ந்து பேசுவேன். இது உண்மையில் ஒரு அரசியல் வழக்கு. என்னை ஏமாற்றுப்பேர்வழி என்று சாயம் பூசுவதற்கான முயற்சிகள் மட்டுமே இவை” என்றார்.

மேலும், தனக்கு எதிரான திட்டத்தின் பின்னணியிலுள்ள அரசியல்வாதி – தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

“எனக்கு எதிரான இந்த வழக்கில் நிதியளித்த அமைச்சரவை அமைச்சர், தற்போது சிறையில் இருக்கிறார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் சிறையில் உள்ளார். என்னை ஒரு மோசடிக்காரன் என்று சாயம் பூசுவதே அவர்களின் முயற்சியாக இருந்தது” எறும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்