பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம்

🕔 June 12, 2024

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் குற்றமாக்கும் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்திற்கு – சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேற்படி சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு, அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக முன்வைக்க – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்