இந்து யாத்திரிகர்கள் மீது காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 09 பேர் பலி

🕔 June 10, 2024

ந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் – இந்து யாத்ரிகர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிதாரிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து குறைந்தது 09 பேர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் புது டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

“தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருந்து காத்திருந்ததாகவும், அவர்கள் பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று மோஹித சர்மா எனும் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

சாரதி கட்டுப்பாட்டை இழந்தமையின் காரணமாக, பஸ் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒன்பது பேர் இறந்தனர், 23 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீரின் தெற்கில் உள்ள ரியாசி நகருக்கு அருகிலுள்ள பிரபலமான இந்து ஆலயத்திலிருந்து பஸ் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இதனை ‘கொடூரமான பயங்கரவாத தாக்குதல்’ எனத் தெரிவித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்