மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம்

🕔 June 9, 2024

ந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா – புதுடெல்வி சென்றுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று (09) மாலை பதவியேற்கவுள்ளார்.

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி இன்று பதவியேற்கிறார். அதேபோல் அவரின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்று முறை பிரதமராக மோடி பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தி யகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு – முன்னிலையில் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி சென்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்