இந்திய நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி படுதோல்வி: அண்ணாமலையை வென்றார் திமுக வேட்பாளர்

🕔 June 4, 2024

ந்திய நாடாளுமன்றத் தேர்தலில் – தமிழகம் முழுவதும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது.

தமிழகத்தின் 39 தொகுதிகளில், ஒரு தொகுதியினைக் கூட, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணியால் கைப்பற்ற முடியவில்லை.

குறிப்பாக, பா.ஜ.க வின் தமழகத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழகத்தின் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 118,068 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளார்.

கோயம்புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றிபெற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கட்சி தமிழகத்தில் 01 ஆசனத்தையும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 02 ஆசனங்களையும் வென்றிருந்தது.

இம்முறை தமிழகத்தில் அண்ணாமலையின் அரசியல் நடவடிக்கைளும், தேர்தல் பிரசாரங்களும் – மிகவும் சூடு பிடித்திருந்த போதிலும், ஒரு தொகுதியைக் கூட தமிழகத்தில் வெல்ல முடியவில்லை என்பது, பா.ஜ.க தரப்புக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதேவேளை, காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கலைஞர் கருணாநிதியின் மகளுமான கே. கனிமொழி – தூத்துக்குடி தொகுகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்