இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு அதிக இரத்த அழுத்த ஆபத்து: பரிசோதனையில் தெரிய வந்தது

🕔 May 29, 2024

லங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் – உயர் இரத்த அழுத்த அதிக ஆபத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குளியாப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையில் குளியாப்பிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள் மற்றும் பேரூந்து நிலைய வர்த்தகர்கள் உட்பட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இவ்வாறு அதிக உயர் இரத்த அழுத்த அதிக ஆபத்தில் உள்ளமை தெரியவந்துள்ளது.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் .இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என, வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அப்பகுதியிலுள்ள அனைத்து இலங்கைப் போக்குவரத்து சவை ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதற்காக, விரைவில் மருத்துவ சிகிச்சையை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்