சட்ட விரோத மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு

🕔 May 29, 2024

ம்புள்ளையில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 04 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தம்புள்ளை விஹாரை சந்தியில் பதிவாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் சட்டவிரோத மதுவை உட்கொண்டதன் மூலம் இறந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் இரண்டு பேர் இன்று அதே சட்டவிரோத மதுவை உட்கொண்டதால் இறந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், இதற்கு முன்னரும் இதே குற்றச்சாட்டின் பேரில் பல தடவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு நீண்டகாலமாக நடந்துவரும் இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்தால், பிரதேசவாசிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்கு கூடுதலாக, நான்கு நபர்களின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய – தடயவியல் அறிக்கைகளும் வரவழைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்னர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்