தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல்

🕔 May 28, 2024

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் நாடாமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘மக்களின் விருப்பத்தின் மூலம் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்பட வேண்டுமே தவிர, அவர்களின் குரலை தாமதப்படுத்துவதன் மூலம் அல்ல’ என்று அவர் தனது X தளத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலங்களை – இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின்பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார யோசனை வெளியிட்டுள்ள நிலையில், நாமல் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ஜனாதிபதி, நாடாளுமன்றின் பதவிக் காலங்களை நீடிக்க, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐ.தே.கட்சி யோசனை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்