வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து, ஊழியரைத் தாக்கியவர் கைது: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

🕔 May 28, 2024

யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபர் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்னர், குறித்த நபர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.

வரவேற்பு பீடத்தில் இருந்த வைத்தியசாலை ஊழியர்களுடன் – அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும், அங்கிருந்த பிரின்டரை தூக்கி வைத்தியசாலை ஊழியரின் தலையில் அடித்து காயப்படுத்துவதையும் சிசிடிவி காட்சிகள் காண்பிக்கின்றன.

பின்னர் அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த சம்பவங்களை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்