ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு

🕔 May 27, 2024

.பொ.த உயர்தர தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத்திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், தகுதியான மாணவ மாணவிகள் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி – குறித்த திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் செயலாளரின் பரிந்துரைகளோடு – வகுப்பாசிரியர், பாடசாலை அதிபர், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பரிந்துரைகளைப் பெற்று, செயலாளர், ஜனாதிபதி நிதியம், இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டீ. ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பி வைக்கவும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில், புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் பெயர் மற்றும் பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ள கல்வி வலயத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.

இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் மே மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் நிலவிய பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மோசமான காலநிலை காரணமாக விண்ணப்பங்களை அனுப்ப முடியாத மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்