71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல்

🕔 April 22, 2024

டந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் இன்று (22) தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த பெரும் போகத்தில் நாட்டில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 68,131 ஹெக்டேயரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற பயிர்கள் மொத்தம் அழிவடைந்துள்ளன.

மேலும், பெரும்போகத்தில் பயிரிடப்பட்ட 100,000 ஹெக்டேயர் நெற்பயிர்களும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தன.

இது தவிர, மேலும் 23,874 ஹெக்டேயர் நிலத்தில் காய்கறிகள் மற்றும் இதர பயிர்கள் பயிரிடப்பட்டு பூச்சிகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி மொத்தம் 27 சதவீதம் பயிர்கள் சேதமடைந்தன என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் காய்கறி மற்றும் பழ வகைகளின் அறுவடைகள் மேம்பட்டு தற்போது அறுவடை அதிகரித்துள்ளன.

சாதகமான காலநிலை காரணமாக குறிப்பாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகள் வெற்றியடைந்துள்ளதாகவும், அதனால் மரக்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்