200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

🕔 April 12, 2024

லங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை கடற்படையினரால் கைப்பற்றியுள்ளனர்.

ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன், பல நாள் மீன்பிடி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது, சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்