அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

🕔 March 26, 2024

னவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன் விளையாட்டுக்கள் (Game) உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன.

அமைச்சர் பவித்ராவின்வின் பேஸ்புக் பக்கம் நேற்று (25) மாலை இணையத் தாக்குதலுக்குள்ளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இணையத் தாக்குதல் குறித்து – அமைச்சர் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அமைச்சர் பவித்ராவின் பேஸ் கணக்குக்கான லின்க்: https://www.facebook.com/pavithrasl

Comments

புதிது பேஸ்புக் பக்கம்