அட்டாளைச்சேனை அர்கம், தமண பிரதேச செயலக கணக்காளரானார்

🕔 March 26, 2024

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஜி.ஏ. அர்கம் – தமண பிரதேச செயலகத்தின் கணக்காளராக இன்று (26) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை கணக்காளர் சேவை தரம் IIIக்கு – பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இம்மாதம் 15ஆம் திகதி அர்கம் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் தமண பிரதேச செயலகத்தின் கணக்காளராக – அவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டக் கல்வியை (BBA) முடித்த அர்கம், பின்னர் அதே துறையில் முதுமாணி (MBA) பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்திலும் (BSc in HM) இவர் சிறப்பு பட்டம் பெற்றுள்ளார்.

பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனத்தில் (CIMA) பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், இணைந்த முகாமைத்துவ பட்டயக் கணக்காளராகவும் (ACMA) மற்றும் முகாமைத்துவ உலகளாவிய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (CGMA) உறுப்பினராகவும் உள்ளார்.

அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்டவர்களில் அர்கம் மட்டுமே தற்போது கணக்காளர் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணக்காளர் அர்கம் – ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர் ஏ.பி.ஏ. கபூர் – இன் மூத்த புதல்வராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்