கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை

🕔 March 25, 2024

பாறுக் ஷிஹான்

ல்முனைஉப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி, சிவில் அமைப்புக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் இன்று (25) ஈடுபட்டுள்ளன.

கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான இந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கை பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை – இந்தக் கவன ஈர்ப்பு முன்னெடுக்கப்படும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் – கல்முனை தலைமையக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று கடந்த 2019 ஆண்டும் –  கல்முனை உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனும் கோாரிக்கையினை முன்வைத்து, உண்ணாவிரத போராட்டம் ஒன்று நடந்தது.

அதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் க.கு. சச்சிதானந்தம், கல்முனை மாநகரசபையின் அப்போதைய உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்