எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேங்காய் உடைத்து வேண்டுதல்

🕔 February 6, 2016
Coconuts dashes - 012ன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று சனிக்கிழமை காலி மாவட்டம் சீனிகம விகாரையில் தேங்காய்களை உடைத்து வேண்டுதலில்  ஈடுபட்டனர்.

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவினை கலைக்குமாறு இவர்கள் இவர்கள் தேங்காய்களை உடைத்தனர்.

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உள்ளிட்டவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிதி மோசடி விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகின்றது.

இதனை முன்னிட்டு, ஒன்றிணைந்த எதிர் கட்சியினர் சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைத்து, நிதி மோசடி விசாரணை பிரிவை கலைக்குமாறு வேண்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை நிதி மோசடி விசாரணை பிரிவை கலைக்கக் கூடாதென தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்