அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு

🕔 March 8, 2024

ரசு நிறுவனங்களால் வாடகையாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களுக்கான வாடகையாக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

பொது நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் தொடர்பில், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

4,427 வாகனங்களை பொது நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பெற்றிருப்பதும், அவற்றுக்கு வாடகையாக வருடாந்தம் 2,562 மில்லியன் செலுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்களில் இயங்கு நிலையிலுள்ள வாகனங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், 01 மார்ச் 2024 நிலைவரப்படி 69,121 வாகனங்கள் இயங்கும் நிலையில் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்