கோவிட் தடுப்பூசி 217 முறை செலுத்திக் கொண்ட நபர்: ஆய்வில் கிடைத்த விநோத முடிவு

🕔 March 7, 2024

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 62 வயதான ஒரு நபர், வைத்தியர்களின் ஆலோசனையை மீறி 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வினோதமான சம்பவம் குறித்து ‘தி லான்செட்’ (The Lancet) எனும் மருத்துவ ஆய்வு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை வருட காலத்தில், தனியாரிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.

அந்த நபரை எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்தனர்.

அந்த நபரின் இரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் பெறப்பட்டன. இதற்கு முன்பாக அவரே சேமித்து வைத்திருந்த சில உறைந்த ரத்த மாதிரிகளையும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.

அந்த நபரின் சொந்த வற்புறுத்தலின் பேரில் ஆய்வின் போது மேலும் ஒரு தடுப்பூசி அவருக்குச் செலுத்தப்பட்டது. 

இந்தச் சோதனைகளையெல்லம் செய்து முடித்தபின், அந்த நபர் இதுவரை எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு மீண்டும் மீண்டும் தடுப்பூசி டோஸ்களை அளிப்பது, சில செல்களை சோர்வடையச் செய்திருக்கலாம் என்று எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த டொக்டர் கிலியன் ஸ்கோபர் கூறுகின்றார்.

ஆனால் 62 வயது நபரின் உடலில் இருந்து இதற்கான எந்த ஆதாரத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. மேலும் அவருக்கு இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

முக்கியமாக, மீண்டும் மீண்டும் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான ஒரு உத்தியாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை,” என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்