தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

🕔 March 6, 2024

ங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று (06) தொடக்கம் – ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த வருடம் மே மாதம் 22ம் திகதி துபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது – சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் 03 கிலோகிராம் எடையுள்ள அறிவிக்கப்படாத தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 74 மில்லியன் ரூபாவாகும். அதேவேளை அவரின் பயணப் பெட்டியிலிருந்து 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 91 கைத்தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து அவருக்கு 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்பான செய்தி: ‘தங்கக் கடத்தல்’ அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்