துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

🕔 March 1, 2024

ஹுங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக இன்று (01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதஆயுததாரிகள் – துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ள்னர்.

சந்தேக நபர்களை கைது செய்ய அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்