சிசிலி கொத்தலாவலவுக்கு விளக்கமறியல்

🕔 February 5, 2016
Sisiliya - 012செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

துபாயிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்தபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிசிலி கொத்தலாவல கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சுகயீனம் காரணமாக அவர், ரகசிய பொலிஸாரின் பாதுகாப்பில், கொள்ளுபிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயினும், அவர் தொடர்பான விசாரணையின் பொருட்டு, கொழும்பு கோட்டை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை சிசிசலி கொத்தலாவலைவை நேரில் சென்று பார்வையிட்டார்.

ரகசிய பொலிஸார் முன்வைத்த அறிக்கையை கருத்தில் கொண்ட நீதவான், சிசிலி கொத்தலாவலவை விளக்கமறியலில் வைக்குமாறு பணித்ததோடு, அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சுமார் 07 வருடங்கள் பிரித்தானியாவில் இருந்து வந்த சிசிலி, நேற்று துபாய் ஊடாக நாட்டுக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்