உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

🕔 February 26, 2024

லகில் ஆப்பிள் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. The Spectator Index இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காலில்தான் உலகில் அதிக விலையில் ஆப்பிள்கள் விற்கப்படுகின்றன. அமெரிக்கா – நிவ்யோர்க் நகரில் ஒரு கிலோகிராம் ஆப்பிள் 7.05 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பெறுமதியில் 2193.90 ரூபாய்) விற்கப்படுகிறது.

உலகில் அதிக விலைக்கு ஆப்பிள் விற்கப்படும் இரண்டாவது நாடாக இலங்கை (கொழும்பு நகரம்) பதிவாகியுள்ளது. அதன்படி இங்கு ஒரு கிலோ ஆப்பிளின் விலை 7.04 டொலர்களாகும். இதன் இலங்கை பெறுமதி 2190.79 ரூபாய்.

கிட்டத்தட்ட அமெரிக்க நிவ்யோர்க் நகரில் விற்கப்படும் அதே விலைக்கே இலங்கையில் ஆப்பிள் கிடைக்கிறது.

The Spectator Index வெளியிட்டுள்ள தகவலின் படி, பாகிஸ்தான் – லாகூரில் ஒரு கிலோ ஆப்பிள் விலை 1.05 டொலர்களாகும். ,இதன் இலங்கைப் பெறுமதி 326.75 ரூபாயாகும்.

இந்தியா – டெல்லியில் ஒரு கிலோ ஆப்பிள் 2.01 அமெரிக்க டொலராகும். இலங்கைப் பெறுமதியில் இது 625.49 ரூயாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்