
பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இசிபதனாராம விகாரையில் பௌத்த பிக்குவாக தற்காலிகமாக மாறியுள்ளார்.
இதன்படி அவர் தற்போது ஹரிஸ்பத்துவே தம்மரதன தேரர் என அழைக்கப்படுகிறார்.
அவருடைய மகன் சன்டகெலும் ராஜபக்ஷவும் இவ்வாறு தற்காலிக பௌத்த பிக்குவாக மாறியுள்ளதோடு, அவர் அம்பாறை தம்மாலோக தேரர் என அழைக்கப்படுகிறார்.
அண்மையில் தனது மனைவி இறந்ததையடுத்து, ஆத்மீக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினரும் சமீபத்தில் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



