வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை

🕔 February 21, 2024

வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெண்களை வீட்டுப் பணியாளர் தொழிலுக்காக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்படி, 10 வருடங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், உரிய பிரேரணையை தயாரிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக கணிசமானோர் செல்கின்றனர்.

இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலிருந்து – பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்