இளவரசர் ஹுஸைன் நாளை வருகிறார்

🕔 February 5, 2016

Prince Husain - 01க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹுஸைன் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நாளை சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது இளவரசர்  ஹுசைன் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஏனைய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்தைகளை மேற்கொள்வார் எனவும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் புத்தி ஜீவிகள், மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள், இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களுடனும் இளவரசர் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கையில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றினை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியங்கள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், மனித உரிகைளைப் பாதுகாப்பது தொடர்பிலும் ஆணையாளர் ஹுசைன் கலந்துரையாடுவார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்தப் பேச்சுவார்த்தை அமையவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்