சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள்

🕔 February 15, 2024

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் சுமார் சுமார் 9500 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றதாக தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு 7,466 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

இதில், 2,242 கொடுமைகள், 472 பாலியல் துஷ்பிரயோகம், 404 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம், 51 பெண் சிறார்கள் பாலியல் வன்புணர்வு செய்தமை மற்றும் ஆபாசமான பதிவுகளுக்கு 06 சிறுவர்களைப் பயன்படுத்தியமை ஆகியவை அடங்கும்.

மேலும், குழந்தை சுரண்டல், கடத்தல், குடும்ப துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் கடத்தல் தொடர்பாகவும் புகார்கள் பெறப்பட்டன.

இந்த முறைப்பாடுகள் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உதயகுமார அமரசிங்க கூறியுள்ளார்.

இதற்கிடையில், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்