முட்டை விலை இன்று முதல் அதிகரிக்கிறது

🕔 February 12, 2024

முட்டையின் விலை – இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை விநியோகம் உட்பட தொழில்துறையில் உள்ள பல காரணிகளின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்திற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு முட்டையின் மொத்த விற்பனை விலை 58 ரூபாயாகவும், சில்லரை விலை 63 ரூபாயாகவும் உயர்வடையும்.

Comments