நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

🕔 February 10, 2024

நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ராமர் கோவில் தரிசனத்துக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்துக்குச் சென்றுள்ள நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று (10) சந்தித்துள்ளார்.

உத்தர பிரதேசம் – அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலைத் தரிசிப்பதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுடன் லக்னோவில் நடந்த சந்திப்புக் குறித்து, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் – தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments