பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

🕔 February 8, 2024

ல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கல்வி அமைச்சின் 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு சூட்ட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலை ஒன்றுககு வைப்பதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நொவம்பரில், சுகாதார அமைச்சின் இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் – போலி ஆவணங்களை உருவாக்கி, ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியது.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபாய் மோசடியாக ஈட்டப்பட்டமை தெரிய வந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்