டெலிகொம் நிறுவன பங்குகளைக் கொள்வனவு செய்ய, 02 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளன

🕔 January 31, 2024

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஜியோ பிளட்ஃபோர்ம் நிறுவனங்களே இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த இரண்டு நிறுவனங்கள் உள்ளடங்கலாக 03 நிறுவனங்கள் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு முன்வந்திருந்தன.

Comments