இலங்கை இழுவைப் படகு 06 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்
பணியாளர்கள் 06 பேருடன் பயணிதத – இலங்கை மீன்பிடி இழுவை படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் திகதி மேற்படி பல நாள் இழுவைப் படகு புறப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தை இலங்கை கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்திய அதேவேளை, கடற்படை ஊடகப் பேச்சாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.