‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது: வாகனமும் சிக்கியது

🕔 January 24, 2024

பெலியத்த பகுதியில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே மாத்தறையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகபரே குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட ஜீப் ரக வாகனத்தை செலுத்தியவர் என்பதுடன் அந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இந்த குற்றச்செயலை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொலையின் சந்தேகநபர்கள் பயணித்த பஜேரோ மிட்சுபிஷி ஜீப் வண்டியை – ஹக்மன, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ மற்றும் யக்கலமுல்ல ஊடாக காலியை வந்தடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்பான செய்தி: அபே ஜனபல கட்சி தலைவைர் உள்ளிட்ட ஐவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்