வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை

🕔 January 23, 2024

ண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நஷ்டஈட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவுகளை – ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை – உரிய அமைச்சுக்களுக்கு கையளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்கிணங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் மூலம், அமைச்சுக்கள் பலவற்றிலுமிருந்தும் நிதியைப் பெற்று – பிரதேசவாரியாக மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் வழிகாட்டுதலுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதியின் பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை – உரிய அமைச்சுக்களுக்கு ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்த யூ.கே. ஆதம்லெப்பை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு உதவிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்த – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பாதிக்கப்ட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் யூ.கே. ஆதம்லெப்பை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்