போக்குவரத்து அபராதம்: இரவிலும் தபால் நிலையங்களில் இனி செலுத்தலாம்

🕔 January 19, 2024

போக்குவரத்து விதி மீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தை செலுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் – தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் வசதி செய்து கொடுப்பதற்கு தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

தற்போது, மேல் மாகாணத்தில் உள்ள சில தபால் நிலையங்கள் இந்தச் சேவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேல்மாகாணத்தில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஏனைய மாகாணங்களுக்கும் இதனை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் – உரிய வசதிகள் செய்து தரப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்