அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

🕔 January 16, 2024

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என, மத்திய கிழக்கு நாடுகளுக்கான – அமெரிக்க ராணுவக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் குறித்த கப்பல் தனது பயணத்தைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரான் ஆதரவு ஹவுதிகள் கடந்த நொவம்பர் முதல் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

குறித்த கப்பல் இரும்பு உற்பத்திப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அது தாக்கப்பட்டபோது ஏடன் வளைகுடாவில் சுமார் 160 கிமீ (100 மைல்) தொலைவில் இருந்ததாகவும், கப்பல் நிறுவனமான ஈகிள் பல்க் ஷிப்பிங் தெரிவித்துள்ளது.

மேலும் கப்பலில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கப்பல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செங்கடலில் அமெரிக்க போர்க் கப்பலின் திசையில் ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணையை, அமெரிக்க போர் விமானம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும், மத்திய கிழக்கு நாடுகளுக்கான – அமெரிக்க ராணுவக் கட்டளைப் பிரிவு கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்