நாய் இறைச்சி தடைச் சட்டம் தென்கொரியாவில் அமுல்

🕔 January 9, 2024

நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை 2027ஆம் ஆண்டுக்குள் நிறுத்தும் புதிய சட்டம் தென்கொரியாவில் அமுலாக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த சில தசாப்தங்களாக நாய் இறைச்சியை உண்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதைத் தவிர்க்கின்றனர்.

நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், நாய்களை அதிகளவில் வளர்ப்பது, வெட்டுவது, நாய் இறைச்சியை வாங்குவது விநியோகிப்பது அல்லது விற்பனை செய்வது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கக் கூடும்.

நாய்களை வெட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதே நேரத்தில் இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பவர்கள் அல்லது நாய் இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கலாம். இருப்பினும், நாய் இறைச்சியை உட்கொள்வது சட்டவிரோதமானது அல்ல.

புதிய சட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு வரும். பண்ணையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் – வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்திற்கான மாற்று ஆதாரங்களைக் கண்டறிய அவகாசம் வழங்கப்பபடும். அவர்கள் தங்கள் வணிகங்களை படிப்படியாக கைவிடுவதற்றகான திட்டத்தை உள்ளூர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தென் கொரியாவில் 2023 இல் சுமார் 1,600 நாய் இறைச்சி உணவகங்களும், 1,150 நாய் பண்ணைகளும் இருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்