ஆரயம்பதியில் 15 வயது பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: சந்தேக நபர்கள் கைது

🕔 January 8, 2024

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரின் காதலனை சந்திப்பதற்காக மேற்படி சிறுமியை சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமையன்று ஆரயம்பதி பகுதிக்கு கூட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு வைத்தே, அந்தச் சிறுமி தாக்கப்பட்டு – கூட்டுப் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 26 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் ஆரயம்பதியை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(நன்றி: டெய்லி மிரர்)

Comments