பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவி அதிகரிப்பு
மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும்உதவி 100 வீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை மருத்துவத்துக்காக நிதியுதவி வழங்கப்படாத நோய்களும் ஜனாதிபதி நிதியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ உதவி வழங்குவதற்கு கவனத்தில் கொள்ளப்படும் மாத வருமான வரம்பு 02 லட்சம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக நிதி உதவி மற்றும் சுகாதார சேவைகளுக்கான ஒத்துழைப்பை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான வலுவான பிரவேசத்தை முன்னெடுக்க ஜனாதிபதி நிதியம் அர்பணிப்புடன் செயற்படுகிறது என்றும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.