இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது
இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக, சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் எனச் சந்தேகிக்கப்படும் 33 பேரை – தாங்கள் கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை அந்த நாட்டு அரசு நடத்தும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் துருக்கியின் எட்டு மாகாணங்களில் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறான சதியில் ஈடுபட்ட மேலும் 13 சந்தேக நபர்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
துருக்கியிலுள்ள வெளிநாட்டினரை குறிவைத்து ‘மொசாட்’ மேற்கொண்டதாகக் கூறப்படும் சதி தொடர்பான மற்றொரு விசாரணையில், 46 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.