71 வயதில் ‘கேப்டன்’ விஜயகாந்த் மரணம்: தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர்

🕔 December 28, 2023
மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த்

தென்னிந்திய நடிகரும் தே.திமு.க கட்சித் தலைவருமான விஜயகாந்த் காலமனார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என, வைத்தியசாசலைத் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் – பல தடவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர் – சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் மூலம் விஜயகாந்த் சுவாசித்து வந்தார்.

தற்போது தே.மு.தி.க அலுவலகத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1952ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி பிறந்த விஜயகாந்த்தின் நிஜப் பெயர் விஜயராஜ். 1979ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ எனும் படத்தில் நடித்து, தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

1991ஆம் ஆண்டு அவர் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து, ‘கேப்டன்’ என விஜயகாந்த் அழைக்கப்பட்டலானார்.

150 திரைப்படங்களுக்கும் மேல் அவர் நடித்துதுள்ள விஜயகாந்த், தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் தெய்துள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்தமை நினைவுகொள்ளத்தக்கது.

விஜயகாந்தின் வெற்றிக்கு அவரின் மனைவி பிரேமலதாவின் பங்களிப்பு அதிகபட்சமானதாகும். விஜயகாந்த் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், தே.மு.தி.க கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பிரேமலதா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்