அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை

🕔 December 27, 2023

திர்காமம் ஆலயத்தில் 38 பவுண் எடைகொண்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (27) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

கதிர்காமம் ஆலயத்துக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுண் நிறை கொண்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் -பிரதான பூசகர் சோமிபால ரி. ரத்நாயக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி கதிர்காமம் விகாரைக்கு வழங்கிய 38 பவுண் தங்க தட்டு காணாமல் போனமை தொடர்பிலேயே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: 38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்