போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது

🕔 December 26, 2023
கான் யூனுஸ் பகுதியிலுள்ள செம்பிறை சங்க அலுவலக கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதுல் நடத்தியது

காஸாவில் போர் நிறுத்தப்பட மாட்டாது என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், காஸாவிலுள்ள பலஸ்தீனர்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டும் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு ஹமாாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க 24 மணி நேரத்தில் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 382 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை 24 மணி நேரத்தில் காஸா தெற்கு பகுதியில் 100 இலக்குகளை தமது விமானப்படை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 07 முதல் குறைந்தது 20,915 பேர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 54,918 பேர் காயமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்