ஓர் அரசியல்வாதியை ஆதரிப்பதற்கு முன்னர், அவர் பற்றி ஆராயுங்கள்: ஐ.தே.க பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

🕔 December 26, 2023

– முன்ஸிப் –

றைவனிடம் நற்கூலியைப் பெறுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாகவே அரசியலில் எனக்குக் கிடைத்த இடத்தை நான் பார்க்கிறேன். என்னிடம் உதவி கேட்டு வருகின்றவர்களுக்கு அரசியல் எனக்குக் கிடைத்துள்ள பதவியைப் பயன்படுத்தி, முடிந்தவரையில் பணியாற்றி வருகின்றேன். அதற்கான நற்கூலி இறைவனிடமிருந்து எனக்குக் கிடைக்கும் என்கிற மனநிறைவு எனக்கு எப்போதும் உள்ளது|” என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால ஆதரவாளர்களை நேற்று (25) இரவு அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் சந்தித்து பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்து பேசுகையில்;

“ஓர் அரசியல்வாதியை ஆதரிப்பதற்கு முன்னர் அவரின் நோக்கம், அவரின் பின்னணி, மக்களுக்கு அவர் உதவக் கூடியவரா என்பவை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து – தெளிய வேண்டும். அதன் பின்னர்தான், அவரை ஆதரிப்பதா? இல்லையா என்கிற முடிவுக்கு மக்கள் வரவேண்டும்.

ஆனால் பெரும்பாலும் மக்கள் – அப்படி ஆராய்ந்து பார்ப்பதில்லை. சண்டியனாக இருப்பதும், வெறும் பணக்காரனாக இருப்பதுமே இப்போது அரசியலுக்குத் தகுதி என்றாகி விட்டது.

அரசியல் ரீதியாக ஆதரவு திரட்டுவதறகாக யாருக்கும் நான் போதைப்பொருள் வழங்குவதில்லை, யாரையும் வன்முறையில் ஈடுபடுத்துவதில்லை. உங்கள் பிள்ளைகளோ, சகோதரனோ என்னுடன் இருக்கிறார் என்றால், அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் என்கிற நம்பிக்கையுடன் நீங்கள் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் நான் பங்கள் விளைவித்ததில்லை.

அரசியலை சாக்கடை என்றுதான் பலரும் கூறுவார்கள். சாக்கடையில் உள்ளவர்கள் அசுத்தமானவர்கள் என்பதுதான் கணிசமானோரின் கருத்தாக உள்ளது. ஆனால் அரசியலை நேர்மையாக செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அவாவும் எனக்கு உள்ளது.

நமது நாடு பாதாளத்தில் வீழ்ந்த போது அதனை தாங்கிப் பிடிக்கக் கூடியவராக நமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைத்தான் அனைவரும் அடையாளம் கண்டனர். அவரும் மிகக்குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளார். தொடர்ந்து, நாட்டைச் செழிப்பான நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே இருக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னொரு காலத்தில் இருந்த மக்கள் செல்வாக்கு நிச்சயம் மீண்டும் கிடைக்கும். அதற்காக நாமும் உழைக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் அதன் தலைமையிடத்திலும் எனக்கு நற்பெயர் உள்ளது. கடந்த காலத்தில் பல நெருக்கடிகளை கட்சி சந்தித்தபோதிலும், கட்சியுடனேயே இருந்தவர்களில் நானும் ஒருவர் என்பதை கட்சித் தலைமை அறிந்து வைத்துள்ளது. அதற்கான வெகுமதி நிச்சயம் கிடைக்கும்.

அரசியலை மக்கள் பணி செய்வதற்குக் கிடைத்த சந்தர்பமாகவே நான் பார்க்கிறேன். அதற்கான கூலி நிச்சமாக இறைவனிடத்திலிருந்து கிடைக்கும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்