ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி

🕔 December 23, 2023

முகம்மது அபு ஹ்வைடி (Mohammad Abu Hwaidi) எனும் ஊடகவியலாளர், காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் இன்று (23) கொல்லப்பட்டார்.

காஸாவில் நடைபெற்றுவரும் போரின் கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இதுவரை 100 ஆக உயர்ந்துள்ளது.

பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, காசா மீதான இஸ்ரேலின் போரை ‘பத்திரிக்கையாளர்களுக்கான நவீன வரலாற்றில் மிகக் கொடியது’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த நாளில் காஸாவில் 201 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாகவும் 368 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் “காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது” என்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

ஒக்டோபர் 07 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 20,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்