யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது

🕔 December 22, 2023
காஸாவில் காயப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயொருவர் டெல் அவிவ் வைத்தியசாலைக்கு கடந்த19ஆம் திகதி ராணுவ விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்

காஸாவுக்குள தரைப்படை நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 784 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை தற்போது 471 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் 390 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 734 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

காஸா மக்கள் தொகையில் கால்வாசியினர் அதாவது 05 லட்சத்து 76,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் “பேரழிவு தரும் பசி மற்றும் பட்டினியை” எதிர்கொள்கின்றனர் என ஐ.நா அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஒக்டோபர் 07 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,140 ஆக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்