வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது

🕔 December 22, 2023

– பாறுக் ஷிஹான் –

வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து  கல்முனை பகுதிக்கு வருகை தந்த பெண்ணொருவரை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை – சந்தேக நபர் கட்டியணைத்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று (21) முற்பகல் வியாபார நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம், 49 வயது மதிக்கத்தக்க மொனராகலை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது குறித்த பெண் – கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்