மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பீட்டர் போல், திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் கௌரவிப்பு

🕔 December 21, 2023

ட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல், இடம் மாற்றம் பெற்று செல்லவுள்ளமையினால் – அவரின் சேவையைப் பாராட்டி, அவருடைய பதவிக் காலத்தின் போது பணியாற்றிய – மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் (19) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது நீதிபதியை மட்டக்களப்பு மாவட்ட மரண விசாரணை அதிகாரிகளின் இணைப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர், மாவட்ட மரண விசாரணை அதிகாரிகள் சார்பாக பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.

குறித்த பிரியாவிடை நிகழ்வில் நீதிவான் நீதிமன்ற பதிவாளர் திருமதி ரி. பிரியதர்ஷினி மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளான எம்.எஸ்.எம். நஸீர் , வி. ரமேஷ் ஆனந்தன், எஸ் .ராசகுமார், ரி. தவகுமார், எஸ். ஜீவரெத்தினம், வி. மணிமாறன், வி.ஆர். மகேந்திரன். ஏ.எல். புஹாரிதீன், எம்.எம். அகமட் சின்னலெப்பை மற்றும் கே. பவளகேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு உரையாற்றிய நீதிபதி பீட்டர் போல்; “நான் கடமையாற்றிய காலகட்டத்தில் எனது கடமைப்பிரிவில் மரண விசாரணை அதிகாரிகளாக கடமையாற்றிய அனைவரும் சிறப்பாகவே தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தீர்கள், அவ்வாறே தொடர்ந்தும் உங்கள் பணி அமையவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Comments